CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

விட்டு போனவளுக்காக !!


முனகலை மட்டும் கேட்டேன்
புரிந்தது அவள்தான் என்று.
வெண்ணிலா போல
வலம் வந்த என் தோழி...
வெள்ளைத் துணியில் பொதிந்த உடலாய்,
உதிரம் கொட்டி கசிந்து படலமாய்,
அவசர மருத்துவ பிரிவில்.

இன்னும் அந்த முனகல்...

மெல்லமாய் அவளைத் தொட்டேன்...
பிதுங்கிய விழி, அகல விரிந்து
பரிதாபமாய் மிரண்டு, மீண்டும் மூடி...

இன்னும் அந்த முனகல்...

வேதனைக்கும் பாஷை இருக்கு?
முனகல் அதன் மொழி என்று.
மொழி உணர்ந்த மனிதன் நான்
இவள் வலி தீர்க்க திராணி இன்றி,
யோசித்தேன் பலவாறாய்...

மறுபடியும் மெல்லமாய் வருடி,
சொல்லத் துடித்தேன் அவளுக்கு:
"என் தேகம் வலிக்க
உன் வலியை எனக்குத்தா..."

இது வெற்று வார்த்தைதானே!
வலி எங்கே மாய்ந்திடும்?

"பிரார்த்திக்கிறேன் உனக்காக - என்
தெய்வம் உன் வேதனை ஏற்றெடுக்கும்."

நெஞ்சுருகி வேண்டி நின்றேன்,
அய்யன் அபய கரம் வேணுமென்று!
மண்டிய என் மன்றாட்டு கேட்டதாலோ
முனகல் மொழி அமைதி கண்டு,
மழலை போல் அவளுறங்கக் கண்டேன்!

0 comments:

Back 2 Top