CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, November 6, 2009

கால் தடங்கள்...
அதே மாலை நேரம்,
அதே காற்று,
அதே கடல் அலை,
அதே கால் தடங்கள் மணலில்-
என் காதலியினுடையது.

அன்று தொலைவில் கண்ட தடங்கள்
நேற்று அருகில் வந்த தடங்கள்
இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள்.
அன்று
உன் காலடி தடங்களாலேயே
உன் வருகையை அறிந்தவன் நான்.
இன்று
பின்தொடர்கிறேன் உன் தடங்களை,
உனக்குத்தெரியாமல்.


சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின்
கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ
சரணடைந்தவனின் கால் தடத்தோடு.ஆண்டுகள் பல உருண்டோடின,
மீண்டும் கண்டேன் உன் கால்தடத்தை,
இரு ஜோடி தடத்தின் அருகே
ஒரு ஜோடி குட்டி தடத்தோடு.நெருங்கினேன் அந்த கால் தடங்களை ஆர்வத்தோடு,
நொறுங்கினேன் குட்டி கால்தடத்தை நீ அழைத்தபோது
நான் உன்னை அழைத்து வந்த பெயரால்?!!


இனி உன் தடங்களை தொடரமாட்டேன் துரோகியே!!!!


பி.கு:-


ஆம் பெற்றோருக்காக என்னைவிட்டுச்சென்று,நான் அவளை அழைத்து வந்த பெயரை தன்மகளுக்கு வைத்து ,என் நினைவில் கணவனுடன் வாழும் அவள் ஒரு
துரோகியே...

புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த சமயம், பெரிய சச்சரவு ஒன்று நமக்குள்ளே. அது நம் நட்பெனும் போர்வையைக் கிழித்தெறிய வாய்ப்பாய்ப்போனது. மறைமுகமாய் வளந்த அந்தக் கொடியில், முதல் பூ பூத்தது போன்ற உணர்வு. நாளொருமுறை தவறாமல் பார்ப்பதும், குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவதும் கடமைகளாக்கிக்கொண்டோம். பார்த்தோம், சிரித்தோம், பயணித்தோம், காதலித்தோம், களித்தோம், தோம், தோம், தோம்... பெற்றோரின் கடமை முடிந்து என் கடமை உலகம் திறந்த காலம் அது. புருசலட்சணம் தேடி நான் பிரிந்த நாள் ஞாபகம் இருக்கிறதா உனக்கு? ‘நாளை முதல் எப்படிப் பார்க்காமல் இருக்கப் போகிறேன்’ என்றாய். ‘பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்றதாக நினைத்துக்கொள்’ என்றேன், அதையும் ரசித்தாய் அழுகையுடன். காலங்கள் மாறின. நாம் பேசும் நேரம் குறைந்தது. திடீரென ஒரு நாள் ‘மறந்து விடு’ என்றாய். அதற்கு என்னதான் நீ காரணங்கள் சொன்னாலும், புரிந்தது எனக்கு, நம், புரிதலில்லாக் காதல்.

காதலின் சக்தியை உணர்த்தினாய், ஏமாற்றத்தின் விளைவுகளைக் நீ கண்டிருக்க வாய்ப்பில்லை. பக்க விளைவுகளின் பக்க விளைவுகள், வாந்திகளாய்க் கொட்டின. நல்லவேளை, அப்போது நீ என் அருகில் இல்லை. ’இப்படிச் செய்த நீ நன்றாகவா இருக்கப் போகிறாய்? கடவுள் இருந்தால் உன்னைச் சும்மா விடுவாரா?’ என்றெல்லாம் நீ படப்போகும் துன்பங்கள் மனதில் கரு நிழல்களாக வலம் வந்தன. தொடரும் பயணம், நம்மை, கூடவே வரும் மனிதர்களின் வாழ்க்கையோடு தொய்த்து எடுக்கின்றது, அவர்தம் அனுபவங்களையும் நம்முடன் பிணைத்துக்கொள்கிறது. இன்னும் முழுமையாக உணரவில்லை உலகம், ஆயினும், இன்று எண்ணுகிறேன், நீயும் எங்காவது வாழ்ந்துகொண்டிருப்பாய், என்னைவிட நல்ல கணவனுடன், இன்னொரு உலகத்தை உனக்குக் காட்டும் உன் குழந்தையுடன், பழசை மறந்து உன்னுடன் உறவாடும் உன் குடும்பத்துடன் என்று. வெறுப்பேதும் இல்லை உன்மேல், நம்புகிறேன், இப்போது நீயும் என் நலம்விரும்பியே என்று. ஹ்ம்ம்... காதலில்லாப் புரிதல். நட்புடனே இருந்திருக்கலாம், நம் பிள்ளைகளாவது இருந்திருக்கும், புதுப் பெயர்களுடன்.

Tuesday, November 3, 2009

மழைமழைப் பிடிக்குமா?
என கேட்டேன்
மழையில் முத்தம் பிடிக்கும்
என்கிறாய்
மழை வரட்டும்
என்றேன்
அவசரமாய்
அரை வாளி
தண்ணீரை தலையில் கவிழ்த்து விட்டு
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறாய்

சாயங்காலம் வரை
அலுவலகம்
உன் ஞாபகம்
என்னருகே வேணும்
ஏதாவது கொடேன்..
கொஞ்சும் கெஞ்சலாய் நான்...
படுக்கை உதறி
அதில் உதிர்ந்து கிடந்த
உன் மல்லிகைப் பூக்கள்
சேகரித்து
என் சட்டைப் பையில் போட்டு
சிணுங்கலாய் சிரிக்கிறாய் நீ...

என்னது இது..
தொலைபேசியின் வண்ணம்
சிவப்பா மாறியிருக்கு?
ம்ம்ம்...அரைமணிக்கொரு தரம்
அலுவலகத்தில் இருந்து
கூப்பிட்டு
சிவக்க சிவக்க
முத்தம் கொடுத்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
கேக்குறதைப் பார்..
செல்லமாய் முறைக்கிறாய் நீ..
சிரிக்கிறேன் நான்..

சாப்பாடு ருசியோ ருசி...
எப்படி?
சொல்ல மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்..
போ.. நானே கண்டுபிடிக்கிறேன்..
உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?
உன் வெட்கத்தை
நான் தான் ஏற்கனவே
ருசித்திருக்கிறேனே...

நான் வீடு
திரும்பும் போது
என்னை வரவேற்க
என்ன உடுத்திக்கட்டும்
என்னைக் கேட்கிறாய்?
ம்ம் எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..
ம்ம்ம்.. அது இல்ல
உடையைச் சொல்லுங்க என்கிறாய்..
அட கொஞ்சம் பொறு..
நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல
போய்யான்னு சொல்லிட்டு
போனை வைத்துவிடுகிறாய்..

சிரிப்பு

நான் சிரிக்கும் போது
அவளும் சிரித்தாள்
கன்னத்தில் குழிவிழுந்தது - அவளுக்கு

எனது உறவினர்களும்,
நண்பர்களும் அழுகின்றனர்..
இப்போதும் சிரிக்கிறாள்....

நான் குழியிலிருக்கிறேன்....

ஊடல்


நாம் காதல் செய்த தருணங்களை விட,
ஊடல் கொண்ட தருணங்களே அதிகம்.

சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
என் வாடிக்கை என்பாய்,
மர‌ண த‌ண்டனையாக‌ உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
எப்படி புரிய‌ வைப்பேன் என் உயிர் நீ என்று.

எத்துனை முறை, நீ என்னை நிராக‌ரித்தாலும்,
ஓயாது என் காதல்,
க‌ரை தொடும் அலை போல.

உன் நினைவுக‌ள் இன்றி வாழ்வ‌தே கொடிது,
அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வ‌து.

ஊடல் இல்லா காத‌லும்
கூட‌ல் இல்லா காத‌லும் காத‌லன்று,
ந‌ம‌க்கும் இது விதிவில‌க்க‌ன்று...

பிரிவு...

அன்பே!
நீ
அருகிலிருக்கையில்,
என் பணிகளுக்கிடையில்
உன்
நினைவு...
உன்னை
பிரிந்திருக்கையில்,
உன் நினைவுகளுக்கிடையில்
என் பணி...
பிரிவு கூட
வரம் நமக்கு!!!

காதல்

பொய்களால் நிரம்பிய
உண்மை...
காற்று இல்லாத உலகில்
சுவாசம்...
உன் இதயம் கொண்டு வாழும்
நான்...!!

சுவாசம்...
காற்றோடு சேர்த்து
என்னையும்
சுவாசித்தாய்...

காற்றை
நுரையீரலுக்கும்,
என்னை
இதயத்திற்க்கும்
அனுப்பினாய்...

இப்போது,
காற்றை மட்டும்
வெளிவிட்டு,
என்னை
சிறைவைத்து விட்டாயே
நியாயமா??!!

Sunday, November 1, 2009

உனக்காகவே...!

பிரிக்க முடியாத
ரணங்களாய் மாற்றி என் நெஞ்சுக்குள்
புதைத்து கொண்டேன் உன்னை...
மாறாத அன்போடு காத்திருக்கிறேன்
மாலையோடு வா...
கல்யாணத்திற்கோ என் காரியத்திற்கோ...?

முறிந்துவிட்ட நட்பு மரம்...

எதிர் பார்த்கிருந்தேன் வாடிக்கையாய்.
எதிர் வருவாயென நூலக வாயிலில்.
பொழுதுகள் நிசப்தமாய் நகர்ந்துபோக
பொருள் அறிந்தேன் நீ விலகி சென்றதை..

நட்புத்தானே காரமாய் வாதம் செய்ததும்,
அன்புதானே அழுத்தமாய்ச் சொன்னதும்...?
வண்ணத்துப் பூச்சியென
கருத்தெல்லாம் பல நிறம்
எந்த வர்ணம் குறைபெறும்? உணர்வாயோ..?

நூலக வாயிற்படிகளிலே
கற்பனை, கவிதை நயம்
கற்கண்டாய் இனித்துச் சுவைதந்து
கடந்துபோன பொழுதுகளை மறப்பாயோ?
முறிந்துவிட்ட நட்பு மரம் - மீண்டும்
இளந்தளிர் பொலிவுதருங் காலம் வரும்?

இன்றைய நாள்...


என் வாழ்வில் வந்த..

நாட்கள் எல்லாம்.

எனக்கு மகிழ்சி தராத போது.

நீ.. வந்த இன்றைய நாளே..

என்னை மகிழ வைத்த இன்ப நாள்.

அன்பும் பாசமும்

நேசமும் தவிப்பும்

மிரட்டலும் தேடுதலும்

காத்திருப்பதும் நட்பும்

மனிதாபிமாணமும்

நடிப்பில்லா உள்ளமும்.

காதலும் கருணையும்.

கனிவும் இனிமையும்

இத்தனையும் சேர்ந்தே

உன்னிடம் கண்டேன்.

அன்றைய நாட்களை விட

இன்றைய நாள் போதும்

நான் வாழ்ந்து..

கொண்டே இருப்பேன்...

விட்டு போனவளுக்காக !!


முனகலை மட்டும் கேட்டேன்
புரிந்தது அவள்தான் என்று.
வெண்ணிலா போல
வலம் வந்த என் தோழி...
வெள்ளைத் துணியில் பொதிந்த உடலாய்,
உதிரம் கொட்டி கசிந்து படலமாய்,
அவசர மருத்துவ பிரிவில்.

இன்னும் அந்த முனகல்...

மெல்லமாய் அவளைத் தொட்டேன்...
பிதுங்கிய விழி, அகல விரிந்து
பரிதாபமாய் மிரண்டு, மீண்டும் மூடி...

இன்னும் அந்த முனகல்...

வேதனைக்கும் பாஷை இருக்கு?
முனகல் அதன் மொழி என்று.
மொழி உணர்ந்த மனிதன் நான்
இவள் வலி தீர்க்க திராணி இன்றி,
யோசித்தேன் பலவாறாய்...

மறுபடியும் மெல்லமாய் வருடி,
சொல்லத் துடித்தேன் அவளுக்கு:
"என் தேகம் வலிக்க
உன் வலியை எனக்குத்தா..."

இது வெற்று வார்த்தைதானே!
வலி எங்கே மாய்ந்திடும்?

"பிரார்த்திக்கிறேன் உனக்காக - என்
தெய்வம் உன் வேதனை ஏற்றெடுக்கும்."

நெஞ்சுருகி வேண்டி நின்றேன்,
அய்யன் அபய கரம் வேணுமென்று!
மண்டிய என் மன்றாட்டு கேட்டதாலோ
முனகல் மொழி அமைதி கண்டு,
மழலை போல் அவளுறங்கக் கண்டேன்!

எனக்கு மட்டும் நீ.. வேண்டும்.


எல்லோரும் இருந்தும் எனக்கு
கிடைக்காத சந்தோசம்.
நீ.. வந்த மறுநாள் தந்தாய்.
நீடிக்குமா.. இல்லை நிலைக்குமா..
என்பதை தேடி தேடி பார்க்கவில்லை

உன்னோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் போது
தேடிக்கொண்டு இருக்கின்றேன்.
உன் இதயத்துக்குள் புகுந்து. உனக்கள்
சிரித்து மகிழும் என்னை.

தெரியாது உன்னை புரிந்து கொண்டேன்.
பரவசம் தரும் உன்னை நான் வாழ் நாள் முழுதும்.
பிரியாத வரம் வேண்டி.
நிக்கின்றேன் என் இருகரம் கூப்பி.

பிரிவது என்றால் சொல்லி விடு
என் இதயத்தை முதல் அழித்துவிட
ஏன் என்கின்றாயா..?
சோகத்தையும் வலியையும் ஏமாற்றங்களையும்
சந்தித்த நான் உன் பிரிவோடு மரணிக்க விரும்புகின்றேன்.

எங்கு இருந்தாலும் வாழ்க
என்று என் உதடு மட்டும்
வாழ்த்தினாலும்.
என் உள்ளத்தின் குமுறல்
என்னை கண்ணீர் கடலில் மூழ்கச்செய்யும்.
முகாரி ராகத்தோடு .

தூரத்தில் என்னை பார்த்த உடனே


தூரத்தில் என்னை பார்த்த உடனே
நீ தலைகுனிந்து நடக்க ஆரம்பிப்பாய்...
நான் உனை கடந்து செல்லும்
அந்த ஒரு விநாடியில் சட்டென தலை நிமிர்ந்து
எனை பார்ப்பாய்...
அந்த இடைவெளியும் உஷ்ணமும் நொடியும்
நம் இருவரின் டைரியிலும் அன்றையத் தினத்திற்க்கான
பக்கத்தில் நிரப்பப் பட்டிருக்கும்...

அந்த ஆரம்ப நாட்களில்


அந்த ஆரம்ப நாட்களில்
உன்னிடம் தொலைப்பேசியில்
நிறைய கதைத்திருக்கிறேன்..

நம் காதலை மோப்பம்
பிடித்து விட்ட கணித ஆசிரியை

என்னை பற்றி உன் வகுப்பில்
பெருமையாக பேசும் தமிழாசிரியர்

என எல்லாக் கதைகளும் பேசி விட்டு
தொலைபேசியை வைக்கும் சமயத்தில்
சரி நான் வைக்கிறேன் பார்க்கலாம் என்பாய்..
நான் உடனே எப்போ பார்க்கலாம் என்பேன்.
கூடிசீக்கிரம் என்பாய்...

இதே கேள்வியை நான் கேட்பேன்
என உனக்கும் அதே பதிலைத் தான்
நீயும் சொல்வாய் என எனக்கும் தெரியும்..

ஆனாலும் அந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல்
முடிந்ததில்லை நம் கதையாடல்..!

என்னவள் பிரிவு

பிரிவு கூட சுகம் தான்
பிரியமானவர்களை பிரியும் போது என்று
உதடு ரசித்த கவிதையை
உள்ளம் ஏனோ ரசிக்க மறுக்கிறது
உன்னை பிரிவதால்.

சிணுங்கல்கள்

திட்டு


செல்ல சிணுங்களுடன்
சின்னதாய் திட்டு என்றேன்
செத்துபோ.... என்றாய்.

*********

சண்டை

நீ வேண்டும் என்றுதானே
சண்டை போட்டேன்.
பிரியும்போதுதான்.
தெரிந்தது.
நீயும் வேண்டும் என்றுதான்
சண்டை போட்டாய்.என்று

*********
அவளிடம்

சொல்வாயா..? நீ..ஒரு சொல்
நானும் உன்னை நேசிக்கின்றேன்
என்று அவளிடம்.

*********
எப்படி

அனுப்பிய பரிசுப்பொருளில்
நூறு முத்தம் கொடுத்து
அனுப்பிவிட்டு கேட்டேன்.
அதில் ஒன்றாவது
பெற்றுக்கொண்டாயா..?
என்று.

உன் பதில் சொன்னது
இல்லை அதில்
நூற்றிஒன்று என்று.

கோபத்துடன்
மௌனமானபோது.என் உதடு
கண்ணே..நீ..எனக்கு கொடுக்கும்
சந்தோசத்தில் கொடுத்த
முத்தங்களை
சரியாக கணக்குபார்க்கவில்லை
அதில் ஒன்று
கூடிவிட்டது என்றாய்...

என் தோழி..


மலர்களே கேளுங்கள்,
தோழர்களே பாருங்கள்
என் தோழி வருகிறாள்..

நிலமும்
அதிர்ந்து கேட்கிறது..
காற்றும்
மனம் வீசுகிறது..

உள்ளத்தை நெருங்கியவள்,
பள்ளத்தில் உருமாற்றியவள்!

என்னை நெருங்கினாள்!

கன்னத்தில் ஒன்று கொடுத்தாள்!!

உர்ர்.. என்றும் பார்த்தாள்!!!

மறைந்தே போனாள்...

கன்னமும் சிவந்து போனது...

பிடித்ததோ புகையல்லவோ,
தோழியே என்னை மன்னித்துவிடு..

செல்லமே... ஏன் ...மாறினாய்


அகம் மலர்ந்து நான் சொன்னேன்
உன்னிடம் காதல்
நீ..முகமூடியனிந்து சொன்ன
காதலை இன்றுதான்
உனர்ந்தேன்.

உன்னோடு சேர்ந்து போன
என் உயிரை வதைக்கின்றாயே
அதில் நீ..யும் வதங்கிகொண்டு
இருக்கின்றாய்.

நீ..வாழவைக்காவிட்டாலும்
யாருக்கும் வலியை கொடுக்காதே.

நான் உன் இதயத்தை பார்த்தேன்
நீ.. என் அழகை பார்த்தாய்.
என் அழகுதான் உன்னை மயக்கியது
என்று இன்றுதான் புரிந்தேன்.


இதயம் - ஓர் உயிர்
காதல் - ஓர் உணர்வு
நீ - என் உயிரில் கலந்த உணர்வு........!
உன்னை பார்க்காத எவனோ
சொல்லியிருக்கிறான்!
தேவதைகள் பூமிக்கு வருவதில்லை என்று!

அவள் காதல்

கனவுக்கு இதமான
அவள் காதல்
மனதுக்குவேறுவிதமானது
உடலுக்கு சிகையான
அவள் காதல்
உறவுக்கு பகையானது
இன்பத்தின் தேடலான
அவள் காதல்
துன்பத்தின் பாடலானது
எண்ணத்தில் கூடலான
அவள் காதல்
ஏக்கத்தில் ஊடலானது
சம்சாரமாக்க துடித்த
அவள்காதல் மின்சாரமானது
ஜாலியாக போன என்காதல்
நான் காலியாக காரணமும் ஆனது

இன்றைய காதல்

மனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று!
சதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று
அன்றய காதல் கல்லறயில் அல்லது கல்யாணத்தில் முடியும்!
இன்று சில்லறையில் அல்லது சில அறையில்!முடியும்!

Saturday, October 31, 2009Friday, October 30, 2009

மறக்க மடியாத தளும்பாய்நீ

அன்று நீண்ட நேரம் பேசிய
இதயமே இப்போ ஏன்
இந்த தயக்கம்

என்றும் என் சொந்தமாய்
என் சிறிய இதயத்தில்
ஒரு துளி கூட நகர்த்தாமல்
என்னும் சுவாசிக்கின்றேன்
உன்னை.

காதல் என்ற கல்லறைக்குள்
ஈரப்பாசியாய் படர்ந்து கொண்டு
உன்னை குளிரச்செய்கின்றேன்
உன்னை.

கை கோர்த்து நடந்த காலத்ததை
மறந்து நீ.. சென்றாய்.
கோர்த்த மாலையில் காதல் என்ற
பூக்கள் உதிர்ந்து போனது
நீயும் நானும் எங்கோ ஒரு
ஓரமாய் ஒருவரை ஒருவர்
சுவாசித்தபடி வாழ்கின்றோம்
இருவரும் ஒருவரை ஒருவர்
ஏமாற்றிக்கொண்டு.....

பெண் பறவை

நீ முத்தமிட்டபோது
இதழ்கள் உதிர்ந்து
அலகுகள் தோன்றின...
நீ தழுவியபோது
கைகள் உதிர்ந்து
சிறகுகள் முளைத்தன...
நீ இணைந்தபோது
எடை இழந்து
பறக்கத் துவங்கினேன்.
இன்றுவரை கிடைக்கவில்லை
நான் இழந்தவைகள்.....
நீ உட்பட!

Saturday, October 24, 2009

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்...
அமர்ந்திருக்கின்றேன்!
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம்
வைத்துக்கொண்டு ...

உன்னை தவிர.....

உன்னுடன் நடக்கும் போது
உன் கைகள் கோர்த்து
நடக்காததால்....
கோபம் கொண்டு
நீ முன்னே நடக்க...
உன் பின்னே ..
உன் பாதங்கள்
நடந்த தடங்களில்
என் பாதங்கள் கோர்த்து
நடந்ததை உலகமே..
பார்த்தது....
உன்னை தவிர......

நிழல்!

உயர்ந்து நிற்கிறேன் நான்
எப்போதும் போலவே
என் அருகிலேயே மௌனமாய்
விழுந்து கிடக்கிறது
என் நிழல்.

காயம்.....மாயம்!

அவள் மலரைப் பறித்தபோது
அச்செடிக்கு வலித்தது
மனக்காயமாய்.
அவள் கூந்தலில் அதைக் கண்டு,
காயம் மறைந்ததுமாயமாய்!

காதல் கண்னீர்

உன் கண்களில்நான் காதலாக குடியேறினேன் ......
நீ கண்ணீராகஎன்னை வெளியேற்றினாய் .......
உன் வானத்திற்குநான் மேகமாக வந்தேன் ......
நீ மழையாகஎன்னை கீழே தள்ளினாய் .....
உன் உள்ளங்கைக்குபனித்துளியாக வந்தேன் .....
நீ வெயிலாகஎன்னை மறைய் செய்தாய் .....
உன் உயிருக்குள்இதயமாக வந்தேன் .....
என் துடிப்பையேநிறுத்தி விட்டாய் .....
நீ என்னை விட்டு செல்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறாய் ....
ஆம் ! முழுவதுமாக உன்னை என்னிடம் விட்டு விட்டு தான் செல்கிறாய் .....

காதல்

தேவதையே !!!
நீ பார்க்கும் பார்வையால்
என் மனதிற்குள் வியர்வையடி
"இவள் காதலில் சிக்கிவிடாதே என்று "
சுண்டி வரும் பால் போல் ,
உன் பார்வையில் சுரண்டு வரும்
காதலிடம்நான் சரணடைந்தேன்
உன் பார்வைகளுக்கான அர்த்தங்களை தேடினேன்
நிறங்கள் பலவானாலும் பூகளுக்குள் இருக்கும் தேன் ஒன்று தான் !!!
உன் பார்வைகளுக்கான அர்த்தமும் ஒன்று தான் ,
என் தேடலுக்கான பதிலும் அது தன், அது
உடல் கடந்தது !
ஊடல் கடந்தது !
கடல் கடந்தது !
மூடல் கடந்தது !
உன் விழி மடல்களுக்குள் ஒளிந்திருப்பது !
அதை காதல் என்பர் !
"நீ என்னை காதலிக்கின்ராயா ?" என்று கேட்க விளைந்தேன்
அதற்கான பதிலும் உன் பார்வை மட்டும் தானா ???
உன் பார்வைகளின் பயணத்துடன் ,

இதயத்தில் நீ!

இதயமாற்றுச் சிகிச்சைக்கு
இணங்கவில்லை நான்...
இதயத்தில் நீ!

விலகாத வினாடிகளாய் இருவரும்

உன் னோடு பேச நானும்
என்னோடு பேச நீயும்
காத்திருக்கும் பல மணி நேரங்களில்
தத்தளிக்கும் மனதை அடக்க
முடியாத பொழுது.
நீயும் நானும் நெருங்கிய நேரம்
கருத்து வேறுபாடுகள் சிலதால்
தூரம் அதிகமாகிப்போகின்றது:
என்ன செய்ய அருகில் இருந்தால்
கேள்விகள் தொடுக்க மறுத்து
உன்னை அரவணைத்துக் கொண்டு
இருப்பேன் ஒவ்வொரு வினாடியும்.

Friday, October 23, 2009

சுமையான காதல்!

மறக்க முடியவில்லை என்னால் உன்னை...
உன் சிரிப்பு என் சிந்தனையை கவர்ந்துவிட்டது
நீ பேசிய வார்த்தைகள் மனப்பாடமாய் ஒலிகின்றது...
என்று நீ வருத்தப்பட்டு கலங்கவைக்காதே என்னை !!!!!

கண் தூங்கும் நேரத்தில் கனவாய் கடக்கின்றாய்...
விழித்து இருக்கும் நேரத்தில் என் வழி மறைகின்றாய்..
என்று நீ வருத்தப்பட்டு கஷ்டப்படுத்தாதே என்னை!!!!

இயல்பாக சிரித்ததும்
இயல்பாக பழகியதும்
இயற்கையின் விதியால்
இன்று காதலாக உருவெடுத்துவிட்டது...
நான் என்ன செய்வது??

மறக்க முடியாத
சுமையான இந்த காதலை
சுகமாக மனதில் சுமக்கலாமே??

நான் இருந்தும்

நீ இல்லை
என்று
ஆனபோது
நான் இருந்தும்
இல்லாமல்
ஆனேன்

அன்புள்ள தோழி...

எந்த எதிர்பார்ப்புகள் இன்றியும்
என் கைகளை பற்றிக் கொண்டாய்..
யார் என்று கேட்டேன்?..
உன் நிழல் என்கிறாய்..
என் கனவுகள் எங்கே என்றேன்?
உன் கண்களை பார் என்கிறாய்..
என் உன் உலகம் எது என்றேன்?
என் மார்போடு தலை சாய்ந்து இது தான் என்கிறாய்..
சொர்க்கம் எது என்றேன்?
மறைமுகமாய் தலை சாய்கிறாய் என் மடியில்...
நட்பு எது என்றேன்?
அதில் பிரிவும் உள்ளடக்கம் என்பதை உறுதி படுத்தினாய்..
எனக்கு திருமணம் என்று கூறி...

நீயே சொல்லடி பெண்ணே

கனவுகளில் வாழ்ந்த என்னை
கைப்பிடித்து அழைத்து வந்து
நினைவுகளில் வாழ வாழவைத்தது
உன் காதல் தானே
இதை உன்னிடம் கூறினால்
நட்பில் எப்படி காதல் வரும் என்று கேட்கிறாய்..
நல்ல நட்பில்தானே புரிதல் இருக்கும்
புரிதலில்தானே காதல் வரும்..
அப்படியெனில் என் காதல் சரிதானே..
என் காதல் தவறு
எனில் கண்டவுடன் வரும் காதலை
என்ன சொல்வது நீயே சொல்லடி பெண்ணே....!

நீ என்னை
மறந்து போனதிலிருந்து,
என்னைத் தேடுகின்றேன் . . .
எங்கெங்கோ ?!

பேசாதே !!!

சுற்றம் மறந்து
சுயத்தையும் மறந்து
உன்னுடன் பேசும் வேளையில்
உளறிவிட போகிறேன்
அந்த மூன்றெழுத்து மந்திரத்தை !!!!

பேசாதே என்னிடம்....!!!

தனிமை..

ஆயிரம் பேர்களோடு இருந்தலும்...
தனிமையாய்
உணர்கிறேன்...
நீ என்னோடு
இல்லாததால்...

நட்பினால் காதல்???

நல்ல நட்பின் புரிதலில்
நல்ல காதல் வந்துவிட்டது என்கிறாய்??
காதல் வந்தபின் - அந்த
நல்ல நட்பு காணாமல்
போய்விட்டதை உணர்ந்தாயா??
தோழனாக தோள் சாயவும் முடியாமல்
காதலனாக கவி பாடவும் முடியாமல்
நட்பை உடைத்து கண்டபடி கஷ்டபடுத்தும்
இந்த காதல் இனிமையானதா??

தோல்வி...

நீ என்னை கொஞ்சும் போதெல்லாம்
உன்னைஉற்று நோக்கி பார்த்து
ஒரு கவிதை தொகுப்பு எழுத
எனக்கும் ஆசை தான்...
ஆனால் என்னெவோ தெரியவில்லை...
நீ என் அருகில் வரும் போதெல்லாம்...
எனை கொஞ்ச மாட்டானா?
என்ற ஏக்கத்திலேயே..
கண்கள் மூடிக் கொண்டுதோற்க்க தயாரகிவிடுவேன்...

தனிமை...

என் தோழியே...
என்னை ஆயுள் கைதியாய்..
பிடித்து..
தனிமைச் சிறையில்அடைத்து விட்டாய்..
இதற்கு நீ எனக்கு
மரணத் தண்டனையே
கொடுத்திருக்கலாம் ...

தோற்ப்பதில் வெற்றி

தோற்றூப் போனவன்எழுதுகிறேன்....
நேற்றூ நீ என் காதலியாய்இருந்தபோது
நிமிஷங்கள் ஓவ்வொன்றும்நேசமய் இருந்தது....
ஆனால்இன்றுஅப்படி இல்லை
வேறாக இருந்தவள் வே றா கிப்போனாள்...
ஆனாலும்நீ வாழ்க
என்னுடை தோல்வி
உனக்கு சந்தோஷம்தறுமெனில்
நான் தோற்ப்பதில் தான்எனக்கு வெற்றி....

சும்மா,சும்மா இதயத்தை கொல்லாத

சும்மா இருந்தவணிடத்தில் சிரித்தாய்
சும்மா இருந்த இதயத்தின் கதவு திறந்துக்கொண்டு
சும்மா கண்ணில் கதிர்வீச்சிஞாய்
சும்மா மூளையிள் கண்ணின் நிழல் பதிந்தது
சும்மா வந்து போஞாய் கண்ணும் பார்த்தது
சும்மா படி இடையில் பேசிணோம்
சும்மா எதுவும் தெரியாதே அப்பாவியாக இருந்தேன்
சும்மா கருத்தைசெல்லி இருந்தால் யேசித்துயிருப்பேன்
சும்மா, சும்மா ஒதிக்கிஞாய் , ஒதுங்கிஞாய்
சும்மா இருந்த இதயம் பிலந்தது மறந்தது எழ தாமதம் எற்பட்டது
சும்மா வெறியன் என வீண் பழீ பலர்ரோடுசூட்டிஞாய்
சும்மா உன்னை இயக்கியவன் சொல் கேட்டு இதயத்தை இருக்கிஞாய்
சும்மா பாவத்தை ஏற்றிக்கொண்டு போகாதே நம்பியவனை ஏமற்றதே
சும்மா கண்ணின் கணவுகள் கணவுயாக போய்யிற்று
சும்மா மனச்சாட்சி இருந்தாள் கோட்து பார் தப்பு தனை சொல்லம்
சும்மா இரு என்று அழகன் ஆட்கொள்வான்

தெரியவில்லை...

என்ன வேண்டுமென்று என் இதயத்திற்கு தெரியவில்லை...
உன் எண்ணம்தான் என்னவென்று
என் மனதிற்கும் தெரியவில்லை

வண்ணக்கனவுகளில்
வலம் வந்த என் வாழ்வு
இன்றோ வந்த திசை தெரியாமல்
வழியிழந்து திக்கற்று நிற்கிறது!
இருக்கிறது எண்திசை !
இருந்தும் என்ன செய்ய...?
எத்திசைதான் என்னால் செல்ல முடியும்
அந்தக் கன்னியின் கடைக்கண் பார்வை இல்லாதபோது..!

Back 2 Top