அதே மாலை நேரம்,
அதே காற்று,
அதே கடல் அலை,
அதே கால் தடங்கள் மணலில்-
என் காதலியினுடையது.
அன்று தொலைவில் கண்ட தடங்கள்
நேற்று அருகில் வந்த தடங்கள்
இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள்.
அன்று
உன் காலடி தடங்களாலேயே
உன் வருகையை அறிந்தவன் நான்.
இன்று
பின்தொடர்கிறேன் உன் தடங்களை,
உனக்குத்தெரியாமல்.
சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின்
கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ
சரணடைந்தவனின் கால் தடத்தோடு.
ஆண்டுகள் பல உருண்டோடின,
மீண்டும் கண்டேன் உன் கால்தடத்தை,
இரு ஜோடி தடத்தின் அருகே
ஒரு ஜோடி குட்டி தடத்தோடு.
நெருங்கினேன் அந்த கால் தடங்களை ஆர்வத்தோடு,
நொறுங்கினேன் குட்டி கால்தடத்தை நீ அழைத்தபோது
நான் உன்னை அழைத்து வந்த பெயரால்?!!
இனி உன் தடங்களை தொடரமாட்டேன் துரோகியே!!!!
பி.கு:-
ஆம் பெற்றோருக்காக என்னைவிட்டுச்சென்று,நான் அவளை அழைத்து வந்த பெயரை தன்மகளுக்கு வைத்து ,என் நினைவில் கணவனுடன் வாழும் அவள் ஒரு
துரோகியே...
Friday, November 6, 2009
கால் தடங்கள்...
Posted by PaRthI at 11/06/2009 02:43:00 PM 0 comments
Labels: காதல்
புரிதலில்லாக் காதல்
அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த சமயம், பெரிய சச்சரவு ஒன்று நமக்குள்ளே. அது நம் நட்பெனும் போர்வையைக் கிழித்தெறிய வாய்ப்பாய்ப்போனது. மறைமுகமாய் வளந்த அந்தக் கொடியில், முதல் பூ பூத்தது போன்ற உணர்வு. நாளொருமுறை தவறாமல் பார்ப்பதும், குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவதும் கடமைகளாக்கிக்கொண்டோம். பார்த்தோம், சிரித்தோம், பயணித்தோம், காதலித்தோம், களித்தோம், தோம், தோம், தோம்... பெற்றோரின் கடமை முடிந்து என் கடமை உலகம் திறந்த காலம் அது. புருசலட்சணம் தேடி நான் பிரிந்த நாள் ஞாபகம் இருக்கிறதா உனக்கு? ‘நாளை முதல் எப்படிப் பார்க்காமல் இருக்கப் போகிறேன்’ என்றாய். ‘பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்றதாக நினைத்துக்கொள்’ என்றேன், அதையும் ரசித்தாய் அழுகையுடன். காலங்கள் மாறின. நாம் பேசும் நேரம் குறைந்தது. திடீரென ஒரு நாள் ‘மறந்து விடு’ என்றாய். அதற்கு என்னதான் நீ காரணங்கள் சொன்னாலும், புரிந்தது எனக்கு, நம், புரிதலில்லாக் காதல்.
காதலின் சக்தியை உணர்த்தினாய், ஏமாற்றத்தின் விளைவுகளைக் நீ கண்டிருக்க வாய்ப்பில்லை. பக்க விளைவுகளின் பக்க விளைவுகள், வாந்திகளாய்க் கொட்டின. நல்லவேளை, அப்போது நீ என் அருகில் இல்லை. ’இப்படிச் செய்த நீ நன்றாகவா இருக்கப் போகிறாய்? கடவுள் இருந்தால் உன்னைச் சும்மா விடுவாரா?’ என்றெல்லாம் நீ படப்போகும் துன்பங்கள் மனதில் கரு நிழல்களாக வலம் வந்தன. தொடரும் பயணம், நம்மை, கூடவே வரும் மனிதர்களின் வாழ்க்கையோடு தொய்த்து எடுக்கின்றது, அவர்தம் அனுபவங்களையும் நம்முடன் பிணைத்துக்கொள்கிறது. இன்னும் முழுமையாக உணரவில்லை உலகம், ஆயினும், இன்று எண்ணுகிறேன், நீயும் எங்காவது வாழ்ந்துகொண்டிருப்பாய், என்னைவிட நல்ல கணவனுடன், இன்னொரு உலகத்தை உனக்குக் காட்டும் உன் குழந்தையுடன், பழசை மறந்து உன்னுடன் உறவாடும் உன் குடும்பத்துடன் என்று. வெறுப்பேதும் இல்லை உன்மேல், நம்புகிறேன், இப்போது நீயும் என் நலம்விரும்பியே என்று. ஹ்ம்ம்... காதலில்லாப் புரிதல். நட்புடனே இருந்திருக்கலாம், நம் பிள்ளைகளாவது இருந்திருக்கும், புதுப் பெயர்களுடன்.
Posted by PaRthI at 11/06/2009 02:39:00 PM 0 comments
Labels: கதை
Tuesday, November 3, 2009
மழை
மழைப் பிடிக்குமா?
என கேட்டேன்
மழையில் முத்தம் பிடிக்கும்
என்கிறாய்
மழை வரட்டும்
என்றேன்
அவசரமாய்
அரை வாளி
தண்ணீரை தலையில் கவிழ்த்து விட்டு
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறாய்
சாயங்காலம் வரை
அலுவலகம்
உன் ஞாபகம்
என்னருகே வேணும்
ஏதாவது கொடேன்..
கொஞ்சும் கெஞ்சலாய் நான்...
படுக்கை உதறி
அதில் உதிர்ந்து கிடந்த
உன் மல்லிகைப் பூக்கள்
சேகரித்து
என் சட்டைப் பையில் போட்டு
சிணுங்கலாய் சிரிக்கிறாய் நீ...
என்னது இது..
தொலைபேசியின் வண்ணம்
சிவப்பா மாறியிருக்கு?
ம்ம்ம்...அரைமணிக்கொரு தரம்
அலுவலகத்தில் இருந்து
கூப்பிட்டு
சிவக்க சிவக்க
முத்தம் கொடுத்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
கேக்குறதைப் பார்..
செல்லமாய் முறைக்கிறாய் நீ..
சிரிக்கிறேன் நான்..
சாப்பாடு ருசியோ ருசி...
எப்படி?
சொல்ல மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்..
போ.. நானே கண்டுபிடிக்கிறேன்..
உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?
உன் வெட்கத்தை
நான் தான் ஏற்கனவே
ருசித்திருக்கிறேனே...
நான் வீடு
திரும்பும் போது
என்னை வரவேற்க
என்ன உடுத்திக்கட்டும்
என்னைக் கேட்கிறாய்?
ம்ம் எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..
ம்ம்ம்.. அது இல்ல
உடையைச் சொல்லுங்க என்கிறாய்..
அட கொஞ்சம் பொறு..
நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல
போய்யான்னு சொல்லிட்டு
போனை வைத்துவிடுகிறாய்..
Posted by PaRthI at 11/03/2009 03:03:00 PM 0 comments
Labels: காதல்
சிரிப்பு
நான் சிரிக்கும் போது
அவளும் சிரித்தாள்
கன்னத்தில் குழிவிழுந்தது - அவளுக்கு
எனது உறவினர்களும்,
நண்பர்களும் அழுகின்றனர்..
இப்போதும் சிரிக்கிறாள்....
நான் குழியிலிருக்கிறேன்....
Posted by PaRthI at 11/03/2009 02:56:00 PM 0 comments
Labels: கவிதை
ஊடல்
நாம் காதல் செய்த தருணங்களை விட,
ஊடல் கொண்ட தருணங்களே அதிகம்.
சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
என் வாடிக்கை என்பாய்,
மரண தண்டனையாக உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
எப்படி புரிய வைப்பேன் என் உயிர் நீ என்று.
எத்துனை முறை, நீ என்னை நிராகரித்தாலும்,
ஓயாது என் காதல்,
கரை தொடும் அலை போல.
உன் நினைவுகள் இன்றி வாழ்வதே கொடிது,
அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வது.
ஊடல் இல்லா காதலும்
கூடல் இல்லா காதலும் காதலன்று,
நமக்கும் இது விதிவிலக்கன்று...
Posted by PaRthI at 11/03/2009 02:30:00 PM 0 comments
Labels: காதல்
பிரிவு...
அன்பே!
நீ
அருகிலிருக்கையில்,
என் பணிகளுக்கிடையில்
உன்
நினைவு...
உன்னை
பிரிந்திருக்கையில்,
உன் நினைவுகளுக்கிடையில்
என் பணி...
பிரிவு கூட
வரம் நமக்கு!!!
Posted by PaRthI at 11/03/2009 02:22:00 PM 0 comments
Labels: பிரிவு
காதல்
பொய்களால் நிரம்பிய
உண்மை...
காற்று இல்லாத உலகில்
சுவாசம்...
உன் இதயம் கொண்டு வாழும்
நான்...!!
Posted by PaRthI at 11/03/2009 02:19:00 PM 0 comments
சுவாசம்...
காற்றோடு சேர்த்து
என்னையும்
சுவாசித்தாய்...
காற்றை
நுரையீரலுக்கும்,
என்னை
இதயத்திற்க்கும்
அனுப்பினாய்...
இப்போது,
காற்றை மட்டும்
வெளிவிட்டு,
என்னை
சிறைவைத்து விட்டாயே
நியாயமா??!!
Posted by PaRthI at 11/03/2009 02:14:00 PM 0 comments
Labels: கவிதை
Sunday, November 1, 2009
உனக்காகவே...!
பிரிக்க முடியாத
ரணங்களாய் மாற்றி என் நெஞ்சுக்குள்
புதைத்து கொண்டேன் உன்னை...
மாறாத அன்போடு காத்திருக்கிறேன்
மாலையோடு வா...
கல்யாணத்திற்கோ என் காரியத்திற்கோ...?
Posted by PaRthI at 11/01/2009 11:52:00 PM 0 comments
Labels: கவிதை
முறிந்துவிட்ட நட்பு மரம்...
எதிர் பார்த்கிருந்தேன் வாடிக்கையாய்.
எதிர் வருவாயென நூலக வாயிலில்.
பொழுதுகள் நிசப்தமாய் நகர்ந்துபோக
பொருள் அறிந்தேன் நீ விலகி சென்றதை..
நட்புத்தானே காரமாய் வாதம் செய்ததும்,
அன்புதானே அழுத்தமாய்ச் சொன்னதும்...?
வண்ணத்துப் பூச்சியென
கருத்தெல்லாம் பல நிறம்
எந்த வர்ணம் குறைபெறும்? உணர்வாயோ..?
நூலக வாயிற்படிகளிலே
கற்பனை, கவிதை நயம்
கற்கண்டாய் இனித்துச் சுவைதந்து
கடந்துபோன பொழுதுகளை மறப்பாயோ?
முறிந்துவிட்ட நட்பு மரம் - மீண்டும்
இளந்தளிர் பொலிவுதருங் காலம் வரும்?
Posted by PaRthI at 11/01/2009 11:28:00 PM 0 comments
Labels: நட்பு
இன்றைய நாள்...
என் வாழ்வில் வந்த..
நாட்கள் எல்லாம்.
எனக்கு மகிழ்சி தராத போது.
நீ.. வந்த இன்றைய நாளே..
என்னை மகிழ வைத்த இன்ப நாள்.
அன்பும் பாசமும்
நேசமும் தவிப்பும்
மிரட்டலும் தேடுதலும்
காத்திருப்பதும் நட்பும்
மனிதாபிமாணமும்
நடிப்பில்லா உள்ளமும்.
காதலும் கருணையும்.
கனிவும் இனிமையும்
இத்தனையும் சேர்ந்தே
உன்னிடம் கண்டேன்.
அன்றைய நாட்களை விட
இன்றைய நாள் போதும்
நான் வாழ்ந்து..
கொண்டே இருப்பேன்...
Posted by PaRthI at 11/01/2009 11:26:00 PM 0 comments
Labels: கவிதை
விட்டு போனவளுக்காக !!
முனகலை மட்டும் கேட்டேன்
புரிந்தது அவள்தான் என்று.
வெண்ணிலா போல
வலம் வந்த என் தோழி...
வெள்ளைத் துணியில் பொதிந்த உடலாய்,
உதிரம் கொட்டி கசிந்து படலமாய்,
அவசர மருத்துவ பிரிவில்.
இன்னும் அந்த முனகல்...
மெல்லமாய் அவளைத் தொட்டேன்...
பிதுங்கிய விழி, அகல விரிந்து
பரிதாபமாய் மிரண்டு, மீண்டும் மூடி...
இன்னும் அந்த முனகல்...
வேதனைக்கும் பாஷை இருக்கு?
முனகல் அதன் மொழி என்று.
மொழி உணர்ந்த மனிதன் நான்
இவள் வலி தீர்க்க திராணி இன்றி,
யோசித்தேன் பலவாறாய்...
மறுபடியும் மெல்லமாய் வருடி,
சொல்லத் துடித்தேன் அவளுக்கு:
"என் தேகம் வலிக்க
உன் வலியை எனக்குத்தா..."
இது வெற்று வார்த்தைதானே!
வலி எங்கே மாய்ந்திடும்?
"பிரார்த்திக்கிறேன் உனக்காக - என்
தெய்வம் உன் வேதனை ஏற்றெடுக்கும்."
நெஞ்சுருகி வேண்டி நின்றேன்,
அய்யன் அபய கரம் வேணுமென்று!
மண்டிய என் மன்றாட்டு கேட்டதாலோ
முனகல் மொழி அமைதி கண்டு,
மழலை போல் அவளுறங்கக் கண்டேன்!
Posted by PaRthI at 11/01/2009 11:21:00 PM 0 comments
Labels: பிரிவு
எனக்கு மட்டும் நீ.. வேண்டும்.
எல்லோரும் இருந்தும் எனக்கு
கிடைக்காத சந்தோசம்.
நீ.. வந்த மறுநாள் தந்தாய்.
நீடிக்குமா.. இல்லை நிலைக்குமா..
என்பதை தேடி தேடி பார்க்கவில்லை
உன்னோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் போது
தேடிக்கொண்டு இருக்கின்றேன்.
உன் இதயத்துக்குள் புகுந்து. உனக்கள்
சிரித்து மகிழும் என்னை.
தெரியாது உன்னை புரிந்து கொண்டேன்.
பரவசம் தரும் உன்னை நான் வாழ் நாள் முழுதும்.
பிரியாத வரம் வேண்டி.
நிக்கின்றேன் என் இருகரம் கூப்பி.
பிரிவது என்றால் சொல்லி விடு
என் இதயத்தை முதல் அழித்துவிட
ஏன் என்கின்றாயா..?
சோகத்தையும் வலியையும் ஏமாற்றங்களையும்
சந்தித்த நான் உன் பிரிவோடு மரணிக்க விரும்புகின்றேன்.
எங்கு இருந்தாலும் வாழ்க
என்று என் உதடு மட்டும்
வாழ்த்தினாலும்.
என் உள்ளத்தின் குமுறல்
என்னை கண்ணீர் கடலில் மூழ்கச்செய்யும்.
முகாரி ராகத்தோடு .
Posted by PaRthI at 11/01/2009 11:16:00 PM 0 comments
தூரத்தில் என்னை பார்த்த உடனே
தூரத்தில் என்னை பார்த்த உடனே
நீ தலைகுனிந்து நடக்க ஆரம்பிப்பாய்...
நான் உனை கடந்து செல்லும்
அந்த ஒரு விநாடியில் சட்டென தலை நிமிர்ந்து
எனை பார்ப்பாய்...
அந்த இடைவெளியும் உஷ்ணமும் நொடியும்
நம் இருவரின் டைரியிலும் அன்றையத் தினத்திற்க்கான
பக்கத்தில் நிரப்பப் பட்டிருக்கும்...
Posted by PaRthI at 11/01/2009 11:13:00 PM 0 comments
Labels: கவிதை
அந்த ஆரம்ப நாட்களில்
அந்த ஆரம்ப நாட்களில்
உன்னிடம் தொலைப்பேசியில்
நிறைய கதைத்திருக்கிறேன்..
நம் காதலை மோப்பம்
பிடித்து விட்ட கணித ஆசிரியை
என்னை பற்றி உன் வகுப்பில்
பெருமையாக பேசும் தமிழாசிரியர்
என எல்லாக் கதைகளும் பேசி விட்டு
தொலைபேசியை வைக்கும் சமயத்தில்
சரி நான் வைக்கிறேன் பார்க்கலாம் என்பாய்..
நான் உடனே எப்போ பார்க்கலாம் என்பேன்.
கூடிசீக்கிரம் என்பாய்...
இதே கேள்வியை நான் கேட்பேன்
என உனக்கும் அதே பதிலைத் தான்
நீயும் சொல்வாய் என எனக்கும் தெரியும்..
ஆனாலும் அந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல்
முடிந்ததில்லை நம் கதையாடல்..!
Posted by PaRthI at 11/01/2009 11:09:00 PM 0 comments
Labels: கவிதை
என்னவள் பிரிவு
பிரிவு கூட சுகம் தான்
பிரியமானவர்களை பிரியும் போது என்று
உதடு ரசித்த கவிதையை
உள்ளம் ஏனோ ரசிக்க மறுக்கிறது
உன்னை பிரிவதால்.
Posted by PaRthI at 11/01/2009 10:25:00 PM 0 comments
Labels: பிரிவு
சிணுங்கல்கள்
திட்டு
செல்ல சிணுங்களுடன்
சின்னதாய் திட்டு என்றேன்
செத்துபோ.... என்றாய்.
*********
சண்டை
நீ வேண்டும் என்றுதானே
சண்டை போட்டேன்.
பிரியும்போதுதான்.
தெரிந்தது.
நீயும் வேண்டும் என்றுதான்
சண்டை போட்டாய்.என்று
*********
அவளிடம்
சொல்வாயா..? நீ..ஒரு சொல்
நானும் உன்னை நேசிக்கின்றேன்
என்று அவளிடம்.
*********
எப்படி
அனுப்பிய பரிசுப்பொருளில்
நூறு முத்தம் கொடுத்து
அனுப்பிவிட்டு கேட்டேன்.
அதில் ஒன்றாவது
பெற்றுக்கொண்டாயா..?
என்று.
உன் பதில் சொன்னது
இல்லை அதில்
நூற்றிஒன்று என்று.
கோபத்துடன்
மௌனமானபோது.என் உதடு
கண்ணே..நீ..எனக்கு கொடுக்கும்
சந்தோசத்தில் கொடுத்த
முத்தங்களை
சரியாக கணக்குபார்க்கவில்லை
அதில் ஒன்று
கூடிவிட்டது என்றாய்...
Posted by PaRthI at 11/01/2009 10:10:00 PM 0 comments
Labels: கவிதை
என் தோழி..
மலர்களே கேளுங்கள்,
தோழர்களே பாருங்கள்
என் தோழி வருகிறாள்..
நிலமும்
அதிர்ந்து கேட்கிறது..
காற்றும்
மனம் வீசுகிறது..
உள்ளத்தை நெருங்கியவள்,
பள்ளத்தில் உருமாற்றியவள்!
என்னை நெருங்கினாள்!
கன்னத்தில் ஒன்று கொடுத்தாள்!!
உர்ர்.. என்றும் பார்த்தாள்!!!
மறைந்தே போனாள்...
கன்னமும் சிவந்து போனது...
பிடித்ததோ புகையல்லவோ,
தோழியே என்னை மன்னித்துவிடு..
Posted by PaRthI at 11/01/2009 10:01:00 PM 0 comments
Labels: நட்பு
செல்லமே... ஏன் ...மாறினாய்
அகம் மலர்ந்து நான் சொன்னேன்
உன்னிடம் காதல்
நீ..முகமூடியனிந்து சொன்ன
காதலை இன்றுதான்
உனர்ந்தேன்.
உன்னோடு சேர்ந்து போன
என் உயிரை வதைக்கின்றாயே
அதில் நீ..யும் வதங்கிகொண்டு
இருக்கின்றாய்.
நீ..வாழவைக்காவிட்டாலும்
யாருக்கும் வலியை கொடுக்காதே.
நான் உன் இதயத்தை பார்த்தேன்
நீ.. என் அழகை பார்த்தாய்.
என் அழகுதான் உன்னை மயக்கியது
என்று இன்றுதான் புரிந்தேன்.
Posted by PaRthI at 11/01/2009 09:59:00 PM 0 comments
Posted by PaRthI at 11/01/2009 09:51:00 PM 0 comments
Posted by PaRthI at 11/01/2009 09:31:00 PM 0 comments
அவள் காதல்
கனவுக்கு இதமான
அவள் காதல்
மனதுக்குவேறுவிதமானது
உடலுக்கு சிகையான
அவள் காதல்
உறவுக்கு பகையானது
இன்பத்தின் தேடலான
அவள் காதல்
துன்பத்தின் பாடலானது
எண்ணத்தில் கூடலான
அவள் காதல்
ஏக்கத்தில் ஊடலானது
சம்சாரமாக்க துடித்த
அவள்காதல் மின்சாரமானது
ஜாலியாக போன என்காதல்
நான் காலியாக காரணமும் ஆனது
Posted by PaRthI at 11/01/2009 09:28:00 PM 0 comments
இன்றைய காதல்
மனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று!
சதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று
அன்றய காதல் கல்லறயில் அல்லது கல்யாணத்தில் முடியும்!
இன்று சில்லறையில் அல்லது சில அறையில்!முடியும்!
Posted by PaRthI at 11/01/2009 09:26:00 PM 0 comments